எனக்கு வருத்தம்பா... ' நீலகிரி புலியை சுட்டுக் கொல்லக்கூடாது' - வானதி சீனிவாசன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

எனக்கு வருத்தம்பா... ' நீலகிரி புலியை சுட்டுக் கொல்லக்கூடாது' - வானதி சீனிவாசன்

எனக்கு வருத்தம்பா... ' நீலகிரி புலியை சுட்டுக் கொல்லக்கூடாது' - வானதி சீனிவாசன்




நீலகிரி புலியை சுட்டுக் கொல்லும் உத்தரவை பாஜக விரும்பவில்லை என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் சுற்றி திரியும் T23 புலி நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாதன் (52) என்பவரை தாக்கி கொன்றது. ஏற்கனவே, அந்த புலி கூடலூரில் 3 பேரை கொன்றுவிட்டு சென்ற நிலையில் மாதனை மட்டும் கொன்றுவிட்டு சடலத்தை உண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், மனித உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள அந்த ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். ஆனால், இரண்டு மூன்று நாட்களுக்கும் மேலாக பிடிபடாத அந்த புலி ஞாயிற்று கிழமை அன்று மேபீல்டு எஸ்டேட்டில் புகுந்து மேய்ந்துகொண்டிருந்த மாட்டை அடித்து கொன்றது.

மேலும், புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியும் தோல்வி அடைந்ததால் ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்நேரமும் அந்த புலியை சுட்டுக்கொள்ளப்படலாம் என்ற செய்திகள் வருகின்றன.

இதற்கு மத்தியில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த காந்தி சிலைக்கு அணிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், தேர்தலுக்கு முன்பு ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வருவதாக திமுக கூறியது. ஆனால் இன்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.பெட்ரோல், டீசல் விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. நீலகிரி புலியை சுட்டுக் கொல்லும் உத்தரவை பாஜக விரும்பவில்லை. தயவுசெய்து அந்த புலியை சுட்டுக் கொல்லாமல் வனத்தில் கொண்டு விடவேண்டும் என்றும் புலி என்பது ஒற்றை உயிர் அல்ல'' என்றும் அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad