மின்கம்பத்தில் ஏறி மின்சார இணைப்பு கொடுத்த முதலமைச்சர்: வைரல் புகைப்படம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, October 21, 2021

மின்கம்பத்தில் ஏறி மின்சார இணைப்பு கொடுத்த முதலமைச்சர்: வைரல் புகைப்படம்

மின்கம்பத்தில் ஏறி மின்சார இணைப்பு கொடுத்த முதலமைச்சர்: வைரல் புகைப்படம்


மின்கம்பத்தில் ஏறி மின்சார இணைப்பு கொடுத்த முதலமைச்சர்: வைரல் புகைப்படம்மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து முதல் அமைச்சர் ஒருவரே மின்கம்பத்தில் ஏறி அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கொடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டவர் சரண்ஜித்சிங் சன்னி என்பது தெரிந்ததே. இவர் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்த போது தங்களுடைய வீட்டில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ஒருவர் விண்ணப்பம் அளித்தார். உடனடியாக கட்டணம் செலுத்தாத ஏழையின் வீட்டில் மின் இணைப்பு கொடுக்க அவரே மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பு வழங்கினார். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad