தமிழகத்தில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, October 26, 2021

தமிழகத்தில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1,090 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 26,97,418 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,090 பேர்களில் 141 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 15 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 36,048 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று 1,326 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 26,48,830 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,20,376 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 505,44,014 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது



No comments:

Post a Comment

Post Top Ad