எடப்பாடியை துரோகி எனக் கூறிய அதிமுக பிரமுகர்! – கட்சியை விட்டு தூக்கிய ஈபிஎஸ்-ஓபிஎஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, October 28, 2021

எடப்பாடியை துரோகி எனக் கூறிய அதிமுக பிரமுகர்! – கட்சியை விட்டு தூக்கிய ஈபிஎஸ்-ஓபிஎஸ்!

எடப்பாடியை துரோகி எனக் கூறிய அதிமுக பிரமுகர்! – கட்சியை விட்டு தூக்கிய ஈபிஎஸ்-ஓபிஎஸ்!

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என அறிக்கை வெளியிட்ட அதிமுக பிரமுகர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

சசிக்கலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஏற்கனவே அதிமுகவில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் இழைப்பதாக கூறி அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் பஷீர் வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதை தொடர்ந்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் பஷீர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad