கோட்சே ட்ரெண்ட்.. நாட்டுக்கே அவமானம்.. பாஜக தலைவர் விளாசல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

கோட்சே ட்ரெண்ட்.. நாட்டுக்கே அவமானம்.. பாஜக தலைவர் விளாசல்!

கோட்சே ட்ரெண்ட்.. நாட்டுக்கே அவமானம்.. பாஜக தலைவர் விளாசல்!



கோட்சே ஆதரவு ட்வீட்களுக்கு எதிராக பாஜக தலைவர் வருண் காந்தி விளாசல்.
மகாத்மா காந்தியின் 152ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில், காந்தியின் செயல்பாடுகளை நினைவுகூரும் வகையில் பல்வேறு தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், ட்விட்டரில் ‘கோட்சே ஜிந்தாபாத்’ (கோட்சே வாழ்க) என்ற ஹாஷ்டாக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. காந்தியின் பிறந்தநாளில், அவரை கொலை செய்த கோட்சே வாழ்க என ட்ரெண்டாகி வருவதை பலரும் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், கோட்சே ஆதரவு ட்வீட்களை பாஜக தரப்பு கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் வருண் காந்தி, “இந்தியா எப்போதுமே ஆன்மீக வல்லரசு நாடாக திகழ்ந்துள்ளது. காந்தி கொடுத்த தார்மீக அதிகாரம்தான் இன்றும் நமது மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
கோட்சே வாழ்க என ட்வீட் போடுபவர்கள் அனைவரும் பொறுப்பில்லாமல் தேசத்தை அவமானப்படுத்தி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். கோட்சே வாழ்க என 64000க்கும் மேற்பட்டோர் ட்விட்டுகளை பதிவிட்டு ட்ரெண்டாக்கியுள்ளனர். இச்செயலுக்கு பல தரப்புகளிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad