பொலிவிழந்த பொறியியல் படிப்புகள்; காத்து வாங்கும் கல்லூரிகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 10, 2021

பொலிவிழந்த பொறியியல் படிப்புகள்; காத்து வாங்கும் கல்லூரிகள்!

பொலிவிழந்த பொறியியல் படிப்புகள்; காத்து வாங்கும் கல்லூரிகள்!

தமிழகத்தில் பொறியிடல் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கிய நிலையில் பல கல்லூரிகள் பாதி இடங்கள் கூட நிரம்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் பட்டப்படிப்புகள் மீதான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் பொறியியல் கல்லூரிகள் இடங்கள் நிரம்பாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடந்து முடிந்துள்ளது.

இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு உட்பட பலரும் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். எனினும் பல பொறியிடல் கல்லூரிகளில் முழு இடங்களும் நிரப்பப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் 378 கல்லூரிகளில் 50 சதவீத இடம் கூட நிரம்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad