இந்தியாவின் ஏவுகணை நாயகன்: அப்துல் கலாமுக்கு முதல்வர் வாழ்த்து! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, October 15, 2021

இந்தியாவின் ஏவுகணை நாயகன்: அப்துல் கலாமுக்கு முதல்வர் வாழ்த்து!

இந்தியாவின் ஏவுகணை நாயகன்: அப்துல் கலாமுக்கு முதல்வர் வாழ்த்து!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அப்துல் கலாம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்


அவர் இதுகுறித்து கூறியதாவது: ஏழ்மை குடும்பத்தில் பிறந்து தனது படிப்பாலும் விடாமுயற்சியாலும் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என பெயர் பெற்று பின்னாளில் இந்திய குடியரசின் முதல் குடிமகனாக உயர்ந்த அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளில் இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்க உறுதியேற்போம்" என
தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதுNo comments:

Post a Comment

Post Top Ad