CSK vs RR: ‘தப்பு பண்ணிட்டோம்’ இந்த வீரர எடுத்திருக்கணும்…தோல்வி குறித்து தோனி வேதனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

CSK vs RR: ‘தப்பு பண்ணிட்டோம்’ இந்த வீரர எடுத்திருக்கணும்…தோல்வி குறித்து தோனி வேதனை!

CSK vs RR: ‘தப்பு பண்ணிட்டோம்’ இந்த வீரர எடுத்திருக்கணும்…தோல்வி குறித்து தோனி வேதனை!



முக்கிய வீரர் இல்லாதது தோல்விக்குக் காரணமாகிவிட்டது என மகேந்திரசிங் தோனி பேசியுள்ளார்.ஐபிஎல் 14ஆவது சீசன் 47ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஃபாஃப் டூ பிளஸி (25), சிரேஷ் ரெய்னா (3), மொயின் அலி (21) போன்றவர்கள் ஒருபக்கம் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், மறுபக்கம் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி ரன் மழை பொழிந்தார். இறுதியில் ருதுராஜ், ரவீந்திர ஜடேஜா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இருவரும் அதிரடி காட்டியதால் சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 189/4 ரன்கள் சேர்த்தது. ருதுராஜ் 101 (60), ஜடேஜா 32 (15) சேர்த்து கடைசிவரை களத்தில் இருந்தார்கள்.
மெகா இலக்கை துரத்திக் களமிறங்கிய ராஜஸ்தான் அணி துவக்கம் முதலே மிரட்டலாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஓபனர்கள் எவின் லிவிஸ் (27, யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 50 (21) ஆகியோர் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார்கள். அடுத்து கேப்டன் சாம்சன் தனது பங்கிற்கு 28 (24) ரன்கள் அடித்த நிலையில் ஷிவம் துபே 64 (42), கிளென் பிளிப்ஸ் 14 (8) ஆகியோர் கடைசிவரை களத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள். இதனால், ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 190/3 ரன்கள் அடித்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தோனி பேட்டி:

இப்போட்டி முடிந்தப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக் கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டிகொடுத்தார். அதில், “டாஸை நாங்கள் இழந்திருக்கக் கூடாது. 190 ரன்கள் நல்ல ஸ்கோர்தான். பனியின் தாக்கம் இருந்ததால், மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறியது. பந்து சரியான வேகத்தில் பேட்டிற்கு வரத் துவங்கியது. நாம் இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் இதனை பயன்படுத்திக்கொண்டனர். முதல் 6 ஓவர்களிலேயே போட்டியை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றனர். 250 ரன்கள் நெருக்கமாக, சமமாக இருந்திருக்கும். அவர்கள் அப்படிதான் விளையாடினார்கள். விரிஸ்ட் ஸ்பின்னர்கள் பந்துவீசியபோது, பிட்ச் கொஞ்சம் கடினமாக இருந்தது. அதன்பிறகு நல்லமுறையில் ஒத்துழைத்தது. இதனை ருதுராஜ் சரியாக பயன்படுத்தினார்” எனத் தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், “இந்த மைதானத்தில் நல்ல ஸ்கோர் எதுவென்று, பந்துகளை எதிர்கொள்ளும்போதே தெரிந்துகொண்டு, பேட்ஸ்மேன்கள் அதற்கேற்றவாறு அதிரடியாக விளையாட வேண்டும். இந்த பிட்சில் 160-180 நல்ல ஸ்கோர் கிடையாது. அவர்கள் பிட்சை சரியாகக் கணித்தனர். துவக்கத்திலேயே சிறப்பாக விளையாடியதால், அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அழுத்தங்கள் இல்லாமல் விளையாடினார்கள். பவர் பிளேவல் தீபக் சஹார் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். இவர் இல்லாதது எங்களுக்கு இழப்புதான். இன்று பௌலர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இப்போட்டியை நிச்சயம் மறந்துவிட வேண்டும். அதேசமயம், இதிலிருந்து பாடமும் கற்றிருக்க வேண்டும். ஏனென்றால், பிளே ஆஃபில் இதேபோல் நடந்தால், அங்கு பாடம் கற்றுக்கொண்டிருக்க முடியாது” எனக் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad