12 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்லும் நாகை மீனவர்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, November 20, 2021

12 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்லும் நாகை மீனவர்கள்

12 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்லும் நாகை மீனவர்கள்

கடந்த 12 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்த நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் சென்றனர்.
 
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து கடலோரப் பகுதிகளில் மழை மற்றும் கடல் சீற்றமாக காணப்பட்டது. இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்தடுத்து உருவான காரணத்தால் இந்திய வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது இதனால் நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், விழுந்தமாவடி, கோடியக்கரை உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் துறைமுகங்களில் படகுகளை பாதுகாப்பாக கட்டி வைத்து மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.
 
கடல் சீற்றம் தனித்ததையடுத்து மீன்வளத்துறை மூலம் இன்று கடலுக்கு செல்ல அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்ல தேவையான டீசல், ஐஸ்கட்டி, உணவு பொருட்கள், தண்ணீர் உள்ளிட்டவைகளை சேகரித்துக் கொண்டு மீனவர்கள் 12 நாள்களுக்குப் பிறகு நம்பிக்கையோடு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad