ஒரு யூனிட்டுக்கு ரூ.3 மின்சார கட்டணத்தை குறைத்த முதல்வர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, November 1, 2021

ஒரு யூனிட்டுக்கு ரூ.3 மின்சார கட்டணத்தை குறைத்த முதல்வர்!

ஒரு யூனிட்டுக்கு ரூ.3 மின்சார கட்டணத்தை குறைத்த முதல்வர்!

பஞ்சாப் மாநிலத்தில் மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 3 ரூபாய் குறித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பஞ்சாப் மாநிலத்தில் மிக அதிகமாக ஒரு யூனிட்டுக்கு மின்சாரம் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும்
கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய முதல்வராக பதவியேற்ற முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூபாய் மூன்று குறைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை அடுத்து பஞ்சாப் மாநில பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பதும் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த மின்சார கட்டண விலை குறைப்பு காரணமாக ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என்பதும் பாதிக்கும் குறைவாகவே மின்சார கட்டணம் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment

Post Top Ad