மக்களை தேடி மருத்துவம் - 32 லட்சம் பேர் பயன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, November 6, 2021

மக்களை தேடி மருத்துவம் - 32 லட்சம் பேர் பயன்!

மக்களை தேடி மருத்துவம் - 32 லட்சம் பேர் பயன்!

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 32,36,622 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் மக்கள் நல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் மக்களை தேடி வரும் மருத்துவம் என்ற புதிய திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 32,36,622 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என தகவல் வெளியிட்டுள்ளார். 
 
மேலும் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எல்லாம் வீடு தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad