நாளை முதல் 5,000 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, November 12, 2021

நாளை முதல் 5,000 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

நாளை முதல் 5,000 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

நாளை முதல் தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சற்றுமுன் பேட்டி அளித்துள்ளார்
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தமிழ்நாட்டில் இதுவரை 491 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மழைக்குப் பிறகு டெங்கு பாதிப்பு குறையும் என்றும் கூறினார். மேலும் மாநிலம் முழுவதும் நாளை முதல் 5000 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad