தேவைப்பட்டால் வேளாண் சட்டங்கள் மீண்டும் வரலாம்! – ராஜஸ்தான் ஆளுனர் சர்ச்சை பேச்சு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, November 21, 2021

தேவைப்பட்டால் வேளாண் சட்டங்கள் மீண்டும் வரலாம்! – ராஜஸ்தான் ஆளுனர் சர்ச்சை பேச்சு!

தேவைப்பட்டால் வேளாண் சட்டங்கள் மீண்டும் வரலாம்! – ராஜஸ்தான் ஆளுனர் சர்ச்சை பேச்சு!

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில் தேவைப்பட்டால் மீண்டும் கொண்டு வரப்படலாம் என ராஜஸ்தான் ஆளுனர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநில விவசாயிகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி தற்போது அறிவித்துள்ளார்.

ஆனாலும் பாஜகவினர் சிலர் வேளாண் சட்டம் திரும்ப கொண்டுவரப்படலாம் என பேசி வருவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து பேசியுள்ள ராஜஸ்தான் ஆளுனர் கல்ராஜ் மிஸ்ரா “விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களின் சாதகங்களை விளக்க அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் அவர்கள் அச்சட்டங்களை ரத்து செய்வதில் உறுதியாக இருந்தனர். தற்போது இச்சட்டங்களை திரும்பப் பெற்று, தேவைப்பட்டால் பின்னர் மீண்டும் கொண்டுவரலாம் என்று அரசாங்கம் கருதுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வேளாண் சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad