கொடைக்கானலில் டெண்ட் ஹவுஸ் அமைத்து தங்க தடை! – கோட்டாட்சியர் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, November 22, 2021

கொடைக்கானலில் டெண்ட் ஹவுஸ் அமைத்து தங்க தடை! – கோட்டாட்சியர் உத்தரவு!

கொடைக்கானலில் டெண்ட் ஹவுஸ் அமைத்து தங்க தடை! – கோட்டாட்சியர் உத்தரவு!

கொடைக்கானலில் தற்காலிக டெண்ட் அமைத்து தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மலைப்பகுதி சுற்றுலா தளங்களில் பிரபலமானது கொடைக்கானல். ஆண்டுதோறும் பலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் நிலையில் அங்கு மலைப்பகுதிகளில் டெண்ட் அமைத்து தங்குதல், கேம்ப் ஃபயர் அமைத்தல் போன்றவற்றை பெரிதும் விரும்புகின்றனர். பல நில உரிமையாளர்கள் தங்கள் பகுதிகளில் தொகை பெற்றுக்கொண்டு டெண்ட் அமைக்க அனுமதி அளிக்கின்றனர்.

இந்நிலையில் கொடைக்கானல் கோட்டாட்சியர் தற்போது விடுத்துள்ள அறிவிப்பில் கொடைக்கானலில் நிரந்தர கட்டட அமைப்பு அல்லாத கூடாரம் அமைத்து தங்குவதற்கு தடை விதிப்பதாக அறிவுறுத்தியுள்ளார். சுற்றுலா பயணிகளை அவ்வாறு தங்க வைத்தால் கூடாரம் அமைப்பவர்கள், நில உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad