கண்ணீர் விட்ட சந்திரபாபு, ஜெகனின் ரியாக்‌ஷன் என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, November 20, 2021

கண்ணீர் விட்ட சந்திரபாபு, ஜெகனின் ரியாக்‌ஷன் என்ன?

கண்ணீர் விட்ட சந்திரபாபு, ஜெகனின் ரியாக்‌ஷன் என்ன?

சந்திரபாபு நாயுடு என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என தெரியாமல் இருக்கிறார் என ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு. 

 
சட்ட சபையில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தனது மனைவியை அவதூறாக பேசியதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியபோது கண்ணீர் விட்டு அழுதார். மேலும் மீண்டும் ஆட்சியை படிக்காமல் இங்கே நுழைய மாட்டேன் என கூறி சட்டப்பேரவையில் இருந்து ஆவேசமாக வெளியேறினார். 
 
இந்நிலையில் இது குறித்து பேசிய ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு  தனது சொந்த தொகுதிக்கு உட்பட்ட குப்பம் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலை இழந்தார். இதனால் அவர் கடுமையான விரக்தியில் உள்ளார். இது அனைவருக்குமே தெரியும். அதனால் அவர் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என தெரியாமல் இருக்கிறார்.
 
இதற்கு முன்னர் சட்டப்பேரவையில் பலமுறை தேவையற்ற சர்ச்சைகளை சந்திரபாபு நாயுடு எழுப்பியுள்ளார். இப்போது அவரை மக்கள் தூக்கி எறிந்ததால் இப்படி நடந்து கொள்கிறார். சந்திரபாபு எல்லாவற்றிலுமிருந்து அரசியல் லாபத்தை மட்டுமே பெற முயல்கிறார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad