வரதட்சணை கொடுமையால் மாணவி தற்கொலை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, November 26, 2021

வரதட்சணை கொடுமையால் மாணவி தற்கொலை!

வரதட்சணை கொடுமையால் மாணவி தற்கொலை!

கேரள மாநிலத்தில் வரட்சணை கொடுமையால்  சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த மாணவி மோபியா பர்வீன். இவர் தொடுபுழாவில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார்.  அவருக்கு ஃபேஸ்புக்கில் முகமது சுஹைல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது காதலாக மலரவே இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.  பின்னர் திருமணம் முடிந்த சில நாட்களில் சுஹைல் பர்வீனிடம் தான் சினிமா எடுக்கவுள்ளதாகவும் அதற்கு ரூ.40 லட்சம் தேவைப்படுவதாக கூறி அதை உன் தந்தையிடம் வரதட்சணையாக வாங்கி வரும்படி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பர்வீன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.  இப்பிரச்சனை பெரிதாகவே பர்வீன் வீட்டிற்கு வந்து ஒரு கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அந்தக் கடிதத்தில் தனது சாவுக்கு கணவர் சுஹைலும் அவரது பெற்றோரும் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து போலீஸார் சுஹைலையும் அவரது பெற்றோரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad