தேங்கிய மழைநீர் அகற்றம்: மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, November 12, 2021

தேங்கிய மழைநீர் அகற்றம்: மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை!!

தேங்கிய மழைநீர் அகற்றம்: மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை!!

கனமழை காரணமாக சென்னை மாநகராட்சியில் 523 இடங்களில் தேங்கிய மழைநீர் 202 இடங்களில் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்து நான்கு ஐந்து நாட்கள் ஆகியும் சில இடங்களில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். 
 
கனமழை காரணமாக சென்னை மாநகராட்சியில் 523 இடங்களில் தேங்கிய மழைநீர் 202 இடங்களில் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 22 சுரங்கபாதைகளில் 17ல் மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் சாய்ந்து விழுந்த 469 மரங்களும் அகற்றப்பட்டன. மழைநீர் அகற்றும் பணியில் 604 மின்மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad