பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!- முதல்வர் ஸ்டாலின் டுவீட் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, November 13, 2021

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!- முதல்வர் ஸ்டாலின் டுவீட்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!- முதல்வர் ஸ்டாலின் டுவீட்

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது
என முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சக மாணவிகளிடம் கூறிய அம்மாணவியை மிதுன் சக்ரவர்த்தி மிரட்டியுள்ளார். இதையடுத்து
அம்மாணவி மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் அப்பள்ளியில் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.


இந்நிலையில்,
கோவை மாணவியின் மரணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad