இப்போ தான் முழிச்சாரோ... வேளாண் சட்ட ரத்து குறித்து கமல் டிவிட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, November 20, 2021

இப்போ தான் முழிச்சாரோ... வேளாண் சட்ட ரத்து குறித்து கமல் டிவிட்!

இப்போ தான் முழிச்சாரோ... வேளாண் சட்ட ரத்து குறித்து கமல் டிவிட்!

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் என கமல் பதிவு. 

 
மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில் விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா காலகட்டத்திலும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன. 
 
இந்நிலையில் நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, விவசாயிகளின் முன்னேற்றத்தை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். எனவே எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். 
 
இதனிடையே தனது ட்விட்டர் பக்கத்தில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும், மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் பதிவிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad