100% தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் இதுதான்!
100% தடுப்பூசி செலுத்திய மாநிலம் குறித்த தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அந்த மாநிலத்தின் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
கடந்த இரண்டு
ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மிக முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்தியாவிலேயே 100% தடுப்பூசி இலக்கை அடைந்த முதல் மாநிலமாக இமாசலப் பிரதேச மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தடுப்பூசி செலுத்த தகுதி
உள்ள 53 லட்சத்து 86 ஆயிரத்து 392 பேர்களுக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு சாதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
No comments:
Post a Comment