ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை; தமிழக அரசின் ஏற்பாடு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, December 31, 2021

ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை; தமிழக அரசின் ஏற்பாடு!

ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை; தமிழக அரசின் ஏற்பாடு!


நடப்பாண்டில் தமிழக ரேஷன் கடைகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்று பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஆங்கிலப் புத்தாண்டு 2022 இன்று பிறந்துள்ளது. பலரும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லா வளமும் பெற்று பேரிடர்கள் நம்மை தாக்காத வண்ணம் இனிய ஆண்டாக அமைய பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் ரேஷன் கடைகளுக்கு எந்தெந்த நாட்களில் பொது விடுமுறை விடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த வேண்டியது ஊடகங்களின் கடமையாகும். அந்த வகையில் நடப்பாண்டு மட்டும் ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் பொது விடுமுறை ஆகும். அதாவது,
ஜனவரி 14 பொங்கல் பண்டிகை
ஜனவரி 18 தைப்பூசம்
ஜனவரி 26 குடியரசு தினம்
ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு
மே 1 மே தினம்
மே 5 ரம்ஜான்
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்
ஆகஸ்ட் 31 விநாயகர் சதுர்த்தி
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி
அக்டோபர் 10 விஜயதசமி
அக்டோபர் 24 தீபாவளி
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ்
ஆகிய நாட்களில் பொது விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர வார விடுமுறை விடப்படுகிறது. எனவே வேலை நாட்களை அறிந்து அதற்கேற்ப அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad