ஒமைக்ரான் பரவல்: ஒரே நாளில் 2,800 விமானங்கள் ரத்து!
ஒமைக்ரான் எதிரொலியாக உலகம் முழுவதும் ஒரே நாளில் 2800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள கொரோனா வேரியண்ட் ஒமைக்ரான், பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை திரிபானது வேகமாக பரவும் எனவும், அதற்கு எதிராக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் குறைவான செயல் திறனைத் தான் கொண்டிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது டெல்டா திரிபை விட பன்மடங்கு அதிகம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரிட்டன், பிரானஸ் உள்ளிட்ட நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. இத்தாலி, துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் ஒமைக்ரான் தொற்றால் ஏற்படுபவை என்று கூறப்படுகிறது.
உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளாகும் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளன. இதனால், பயணிகள் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில், உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 12,000 விமானங்கள் தாமதமாகியுள்ளன. வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் விமான நிலைய பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ள காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment