தங்கமணி வீட்டில் ரெய்டு: கணக்கில் வராத ரூ.2.16 கோடி சிக்கியதாக தகவல்!
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை செய்து வருகிறார்கள் என்ற செய்தியை ஏற்கனவே
பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் தற்போது ஒரு சில இடங்களில் சோதனை முடிவுக்கு வந்துள்ளதாகவும் இதுவரை நடந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரூ.2.16 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
மேலும் அவர் கோடிக்கணக்கில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்திருப்பதாகவும் அது குறித்த ஆவணங்களும் சிக்கி இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
No comments:
Post a Comment