டிச. 30 வரை மாரிதாஸுக்கு காவல் - நீதிபதி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 16, 2021

டிச. 30 வரை மாரிதாஸுக்கு காவல் - நீதிபதி உத்தரவு!

டிச. 30 வரை மாரிதாஸுக்கு காவல் - நீதிபதி உத்தரவு!

இன்று மாரிதாஸ் மீண்டும் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு டிச. 30 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபல யூட்யூபராகவும், அரசியல் விமர்சகராகவும் இருந்து வருபவர் மதுரையை சேர்ந்த மாரிதாஸ். சமீபத்தில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை இட்டதாக மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிய உரிய முகாந்திரம் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று மாரிதாஸ் மீண்டும் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் காதர் மீரான் என்பவர் அளித்த புகாரின் பேரில் 4 வழக்குகள் மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ள அவர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணைக்கு பின்னர் மாரிதாஸை டிச. 30 வரை காவலில் வைக்க நீதிபதி விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad