கேப்டன் வருண்சிங் உடல்நிலையில் முன்னேற்றம்: 3 அறுவை சிகிச்சை செய்ததாக தகவல்!
சமீபத்தில் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரான கேப்டன் வருண்சிங் அவர்களின் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் விரைவில் நினைவு திரும்ப வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் கேப்டன் வருண்சிங் அவர்களுக்கு 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் விமானப்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 45 சதவீத தீக்காயங்களுடன் உயிர் தப்பிய வருண்சிங் அவர்கள் நினைவு திரும்பினால் இந்த விபத்து குறித்த மேலும் சில தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது
ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண்சிங் அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல் அனைவருக்கும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment