ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்! – முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு!
குன்னூர் ஹெலிகாப்டர்
விபத்தில் உயிரிழந்த ஆந்திராவை சேர்ந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நிவாரணம் அறிவித்துள்ளார்.
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லி கொண்டு செல்லப்பட்ட உடல்களுக்கு நேற்று ராணுவ மரியாதையுடன் இறுதி காரியங்கள் செய்யப்பட்டன.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆந்திராவை சேர்ந்த சாய் தேஜாவும் ஒருவர் ஆவார். நாட்டுக்காக பணியில் இருக்கும்போது மரணித்த சாய்
தேஜாவின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண உதவியாக வழங்குவதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment