மஹாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் உறுதி !
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து
ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவன எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் பாதித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,இன்று மதியம் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது மஹாராஷ்டிராவை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் மொத்தம் 17 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள
நிலையில் இதுவரை இந்தியாவில் 35 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
No comments:
Post a Comment