7 மாவட்டங்களில் இன்னும் சிலமணி நேரங்களில் இடியுடன் கனமழை: வானிலை அறிவிப்பு
இன்னும் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் இன்று காலை தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இன்னும் 2 அல்லது 3 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நெல்லை தென்காசி கடலூர் விழுப்புரம் நாகப்பட்டினம் திருவண்ணாமலை
மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
No comments:
Post a Comment