காதலியை சந்திக்க சென்ற மாணவனுக்கு திருமணம் ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 16, 2021

காதலியை சந்திக்க சென்ற மாணவனுக்கு திருமணம் !

காதலியை சந்திக்க சென்ற மாணவனுக்கு திருமணம் !

தனது காதலியைப் பார்க்கச் சென்ற மாணவனுக்கு திருமணம் செய்து வைஒத்த 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திருவோணம் அருகேயுள்ள பகுதியில் வசித்து வரும் மாணவி ஒருவர் (16 வயது). இவர் அங்குள்ள பள்ளியில் +2 படித்து வருகிறார்.

அதே வகுப்பில் படித்து வரும் மாணவரும் தீவிரமாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், அந்த மாணவன் கடந்த திங்கட்கிழமை காதலியைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார்.

அப்போது மாணவியின் வீட்டிற்கு அருகே இருவரும் பேசிக் கொண்டிருந்த்ததை ஊர் மக்கள் பார்த்து மாணவியின் பெற்றோரிடம் கூறிவிட்டனர்.

மாணவியின் பெற்றோர் இருவரிடமும் விசாரணை நடத்தவே, இருவரும் காதலித்து வருவதாகக் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இருவரும் இந்த நேரத்தில் பேசுவது தவறு எனக் கூறி இருவரையும் கோயிலுக்கு அழைத்து சென்று இருவருக்கும் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர்.  இதுகுறித்து போலீஸார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாணவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கிழ் 8 பேர் மீத் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad