கடைசி நாளில் ஆதிக்கம்... முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி...
இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 230 புள்ளிகளுடனும், நிஃப்டி 17300 புள்ளிகளை நெருங்கும் நிலையிலும் சிறப்பான வர்த்தகத்தை ஆரம்பித்தன. ஐடிஎஃப்சி 10%, சுஸ்லான் 5% உயர்ந்துள்ளது. CMS தகவல் அமைப்புகள் 2% அதிகமாக பட்டியலிடப்பட்டுள்ளன.
2021ம் ஆண்டின் இறுதி நாள் மற்றும் இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றுன் நிஃப்டி உயர்வுடன் தொடங்கின. நிஃப்டி துறைகள் சார்ந்த குறியீடுகளில் அனைத்து துறைகளும் பச்சை நிறத்தில் வர்த்தகத்தை ஆரம்பித்தன. இன்றைய ஆற்றல் மிகுந்த பங்குகளில் வோடஃபோன் ஐடியா, ஐடிஎஃப்சி, ஆர்பிஎல் வங்கி, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி உள்ளிட்ட சில பங்குகள் உள்ளன.
காலை 10.15 மணியளவில் மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 448 புள்ளிகள் உயர்ந்து 58245 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி 140 புள்ளிகள் அதிகமாகவும் சிறப்பாக வர்த்தகமாகி வருகின்றன. நிஃப்டி ஐடி குறியீடு 0.22 சதவீதம் குறைந்துள்ளது. மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்வில் உள்ளன. இண்டிகோ பெயிண்ட்ஸ் 13 சதவீதம் அதிகரித்து பங்கு 2195 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும், ஐடிஎஃப்சி, டேஸ்டி பைட் ஈட்டபிள்ஸ், ஜிஐசி உள்ளிட்ட பங்குகள் அனைத்தும் லாபத்தில் உள்ளன.
மறுபுறம் திலிப் பில்ட்கான் பங்குகள் 4 சதவீதம் சரிந்து 459 ரூபாய்க்கு விற்பனையாகி நஷ்டத்தில் உள்ளது. ஆயில் இந்தியா, இன்டலெக்ட் டிசைன், கிராஃபைட் இந்தியா உள்ளிட்ட பங்குகள் நஷ்டமடைந்துள்ளன.
2022 நிதிநிலையில் சிறந்த செயல்திறனைக் காண வாய்ப்புள்ளதாகவும், அதிக ஜிடிபி வளர்ச்சி, கேபெக்ஸ் மேம்படுத்துதல், கடன் தேவை அதிகரிப்பு, என்பிஏக்கள் குறைதல் மற்றும் லாபம் அதிகரிப்பது ஆகியவை வங்கிப் பிரிவிற்கு நல்ல முன்னேற்றம் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எஃப்ஐஐகள் தொடர் விற்பனையை அழுத்தினால், வங்கிப் பங்குகள் மந்தமாகவே இருக்கும். ஆனால், 23ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதால், எஃப்ஐஐகள் மீண்டும் வரலாம். மேலும், ஏற்றுமதிகள் சிறப்பாகச் செயல்படுவதால், மருந்துகள், சிறப்பு இரசாயனங்கள் மற்றும் ஜவுளிகள் போன்ற பிரிவுகள் 2022 இல் சிறப்பாக செயல்படும் என ஆய்வாளார்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஐடியில், அதிக மதிப்புள்ள மிட் கேப்களை விட பெரிய கேப்கள் பாதுகாப்பானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment