ரஜினிகாந்த் வீட்டிற்கு முன் மயங்கி விழுந்த ரஜினி ரசிகர்! – பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பரபரப்பு!
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று அவரது வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களில் வயதான ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் கேக் வெட்டியும், அன்னதானம் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
ரஜினி பிறந்தநாளில் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லம் முன்பாக ரசிகர்கள் கூடுவதும் ஆண்டுதோறும் வழக்கமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வழக்கம்போல ரஜினி ரசிகர்கள் பலர் அவரது வீடு முன்பு கூடியுள்ளனர். அங்கு ரஜினியின் தீவிர ரசிகரான நஸீருதீன் என்பவர் ரஜினியின் புகைப்படங்கள் அடங்கிய பெட்டியை எடுத்து வந்துள்ளார். அதிலிருந்த புகைப்படங்களை எடுத்துக் காட்டி ரஜினி வாழ்க என கோஷமிட்டபோது அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக சுற்றி இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பி நிலவியுள்ளது.
No comments:
Post a Comment