ஒரே நாளில் சரிந்த பிட்காயின்களின் விலை! – குறைகிறதா பிட்காயின் மோகம்?
க்ரிப்டோகரன்சிகளில் பிரபலமானதான பிட்காயின் மதிப்பு ஒரே நாளில் 20 சதவீதம் குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் க்ரிப்ரோகரன்சி புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதில் பிட்காயினில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். இந்தியாவிலும் பிட்காயின் மீதான முதலீடு அதிகமாக
இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் க்ரிப்டோகரன்சி பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனால் க்ரிப்டோகரன்சிகள் மீதான முதலீடு குறைய தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் பிட்காயினின் மதிப்பு 20 சதவீதம் குறைந்துள்ளது.
No comments:
Post a Comment