தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தமிழக அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் தொடங்கி கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தொடர்ந்த
ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அமைச்சர் சாமிநாதன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment