ஒரே தகனமேடையில் பிபின்ராவத், அவரது மனைவி: குண்டுகள் முழங்க தகனம்!
சமீபத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் பலியாகி உள்ள
நிலையில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரது உடல்களையும் ஒரே மேடையில் வைத்து தகனம் செய்த தகவல் தற்போது வந்துள்ளது
ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் நேற்று டெல்லிக்கு எடுத்துச் சென்ற நிலையில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்
இதனை அடுத்து முழு ராணுவ மரியாதையுடன் 80 குண்டுகள் முழங்க இன்று இருவரது
உடல்களும் தகனம் செய்யப்பட்டது. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரது உடல்களும் ஒரே மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்ட காட்சியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment