மாறுங்கள் அல்லது மாற்றப்படுவீர்கள்! – எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!
குளிர்கால கூட்டத்தொடருக்கு வராத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படும் நிலையில் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பல கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாமல் இருப்பதும் தொடர்கிறது.
இந்நிலையில் கூட்டத்தொடரில் பாஜக எம்.பிக்கள் சிலர் கலந்து கொள்ளாததாக தெரிகிறது. இதுகுறித்து பாஜக எம்.பிக்களை மறைமுகமாக பிரதமர் மோடி கண்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜக எம்.பிக்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment