இங்கிலாந்தில் சமூகப் பரவலாக தொடங்கிய ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு!
இங்கிலாந்தில் ஒமிக்ரான் வைரஸ் சமுகப் பரவலாக மாறியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
உருமாறிய கொரோனா
வைரஸான ஒமிக்ரான் தற்போது வரை 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் சமூகப் பரவலாகியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
இதனால் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்
என அறிவுறுத்தப்படுகின்றனர்.
No comments:
Post a Comment