டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து வழக்கு !
டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக டாஸ்மாக் கடைகள் செயல்படும்
நேரம் கடந்த ஜூலை மாதம் மாற்றப்பட்டது. அதன்படி டாஸ்மாக் கடைகள், மது பார்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தது. தற்போது கொரோனா குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் டாஸ்மாக் செயல்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி இனி டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில்
விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
No comments:
Post a Comment