கார்த்தியின் விருமன் பட நடிகை பலாத்காரம் செய்யப்பட்டாரா?
கார்த்தியின் விருமன் படத்தில் நடித்திருக்கும் நடிகை பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ஷங்கரின் மகள் அதிதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் விருமன்.
கடந்த வாரம் தான் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து படக்குழுவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு நன்றி தயாரிப்பாளர் சூர்யா என்று தெரிவித்திருந்தார் கார்த்தி.
அதை பார்த்த சூர்யாவோ, நன்றி ஹீரோ சார் என்று பதில் அளித்திருந்தார்.
ஷங்கர் மகளை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விருமன் படத்தில் நடித்தபோது துணை நடிகை பானுப்பிரியா என்பவர் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒரு பத்திரிகை செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
இதை பார்த்த சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, கார்த்திணா இது என்ன புகார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு நடிகை பலாத்காரம் செய்யப்பட்டும் அது குறித்து ஊடகங்கள் அமைதி காப்பது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
முத்தையாவின் படங்களில் பெண்களை வலுவானவர்களாக காட்டுவார். அப்படிப்பட்டவரின் படப்பிடிப்பின்போது ஒரு நடிகைக்கு பாலியல் கொடுமை நடந்திருக்கிறதா என்று சமூக வலைதளவாசிகள் வியந்து கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment