இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை சரிவு!
இந்தியாவில் வரிசையாக இரு சக்கர வாகன விற்பனை சரிவைக் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு நவம்பர் மாதத்தில் விற்பனை ஆன இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. இது கடந்த 2019 மற்றும் 2020
ஆகிய ஆண்டுகளின் விற்பனை எண்ணிக்கையை விட குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத விற்பனை 14,33,855 யூனிட்கள். இதே மாதத்தில் 2019 ஆம் ஆண்டு 17,98,897 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதே போல 2020 நவம்பரில் 14,44,762 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment