புத்தாண்டு கொண்டாட்டம்... சன்னி லியோன் புதுச்சேரி விஜயம்!
பாலிவுட் பிரபல நடிகை சன்னி லியோன் புதுச்சேரியில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
தமிழகத்தில் தனியார் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும், டிச.31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பொது இடங்கள் மற்றும் தனியார் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
மேலும், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி சுண்ணாம்பாறு படகு குழாம், பாரடைஸ் கடற்கரை, ஓல்டு ஹார்பர் உள்ளிட்ட இடங்களில் தனியார் பங்களிப்புடன் டி.ஜே. இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் விழிப்புணர்வு செய்து அசத்திய பயிற்சியாளர்!
இந்த இசை நிகழ்ச்சியை கமர் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் ஒருங்கிணைப்பு செய்கிறது. இதுகுறித்து தகவல் வெளியிட்ட அந்த நிறுவனம், புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை கொண்டாட அரசு முழு தளர்வு அனுமதி அளித்துள்ளதால் வரும் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய மூன்று நாட்கள் லோலண்ட் டி.ஜே. இசை நிகழ்ச்சி நடக்கவிருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புத்தாண்டு நிகழ்ச்சியில், பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் (Sunny Leone) உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கலந்துக்கொள்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment