முந்திரி லாரியை கடத்திய முன்னாள் அமைச்சர் மகன்! – பாய்ந்தது குண்டர் சட்டம்!
தூத்துக்குடியில் முந்திரி லாரியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் செல்லப்பாண்டியன். அப்போதைய அதிமுக
ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இவர் இருந்தார்.
இவரது மகன் ஜெபசிங் என்பவர் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள முந்திரிகளை ஏற்றி சென்ற லாரியை கடத்தியதாக கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மீது குண்டர் சட்டமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மகன் லாரி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment