சிலிண்டருக்கு மானிய பணம் இன்னும் வரலயா? காரணம் இதுதான்! உடனே சரிபண்ணுங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, December 25, 2021

சிலிண்டருக்கு மானிய பணம் இன்னும் வரலயா? காரணம் இதுதான்! உடனே சரிபண்ணுங்க!

சிலிண்டருக்கு மானிய பணம் இன்னும் வரலயா? காரணம் இதுதான்! உடனே சரிபண்ணுங்க!



சமையல் சிலிண்டருக்கான மானியம் மீண்டும் வழங்கப்பட்டு வரும் நிலையில், நிறையப் பேருக்கு இன்னும் கிடைக்கவில்லை.
நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு சுகாதாரமான சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு சிலிண்டர் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன்படி வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர்கள் அரசு தரப்பிலிருந்து வழங்கப்படுகின்றன. ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கும். அதைத் தாண்டி வாங்கவேண்டுமென்றால் சந்தை விலையில்தான் வாங்க வேண்டும்.


இந்த சமையல் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து மானிய உதவியும் வழங்கப்படுகிறது. இந்த மானியம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். சென்ற ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பிரச்சினை வந்தபிறகு சிலிண்டருக்கான மானியம் திடீரென நிறுத்தப்பட்டது. நிறையப் பேருக்கு மானியம் நிறுத்தப்பட்டதே தெரியவில்லை. மத்திய அரசு நிரந்தரமாகவே மானியத்தை நிறுத்தப்போவதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால், சென்ற மாதம் மீண்டும் மானியத் தொகை வழங்கப்பட்டது.

நிறையப் பேருக்கு இப்போது மானிய உதவி வந்துகொண்டிருக்கிறது. ஆனால், சிலர் சிலிண்டர் மானியம் வரவில்லை என்று கூறுகின்றனர். அவர்களுக்கு சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் இருக்கலாம். ஆனால், வேறு சில காரணங்களுக்காகவும் சிலிண்டர் மானியம் வராமல் போகலாம்.

சிலிண்டர் மானியம் பெறுவதற்கு ஆதார் மிக முக்கியமாகும். ஆதார் கார்டை சிலிண்டர் கணக்குடன் இணைக்காவிட்டால் மானியம் கிடைக்காது. அதேபோல, குடும்பத்தின் ஆண்டு வருமானம் அரசு நிர்ணயித்த அளவைத் தாண்டியிருந்தாலும் மானியம் வராது. ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் மானியம் பெறும் தகுதி இல்லை. எனவே ஆண்டு வருமானம், ஆதார் இணைப்பு போன்றவற்றை சரிபார்க்க வேண்டும். ஒருவேளை ஆதார் இணைக்கப்படாமல் இருந்தால் உடனடியாக இணைத்துவிடலாம்.

சிலிண்டர் மானியம் குறித்துத் தெரிந்துகொள்வதற்கு http://www.mylpg.in என்ற வெப்சைட்டில் சென்று பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad