ஏழுமலையான் பக்தர்கள் செய்த சம்பவம்.. கடகடவென விற்றுத் தீர்ந்த தரிசன டிக்கெட்டுகள்!
ஒரு மணி நேரத்துக்குள் 4.60 லட்சம் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகளை அள்ளிச்சென்ற ஏழுமலையான் பக்தர்கள்.திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட்டுகளுக்கு பயங்கர டிமாண்ட் உருவாகியுள்ளது. இந்நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் டிக்கெட்டுகளை பதிவு செய்து அதகளப்படுத்தியுள்ளனர்.
ஜனவரி மாதத்துக்கான 4,60,000 தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் நேற்று ஆன்லைனில் வெளியிட்டது. டிக்கெட் பதிவு தொடங்கிய உடனேயே 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்துக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் டிக்கெட் பதிவு சுமூகமாக முடிவடைந்துள்ளது.
தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியான 55 நிமிடத்துக்குள் ஜனவரி மாதத்துக்கான ஒட்டுமொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. ஒரு மணி நேரத்துக்குள்ளேயே ஜனவரி மாதத்துக்கான டிக்கெட்டுகளை அள்ளிச்சென்றுள்ளனர் ஏழுமலையான் பக்தர்கள்.
ஜனவரி 1, ஜனவரி 13 முதல் 22ஆம் தேதி ஆகிய நாட்களுக்கு தினசரி 20,000 டிக்கெட்டுகள், ஜனவரி 2, ஜனவரி 23 முதல் 31ஆம் தேதி ஆகிய நாட்களுக்கு தினசரி 12000 டிக்கெட்டுகள் என்ற விகிதத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுபோக, ஜனவரி 1, 2, 13, 22, 26 ஆகிய தேதிகளில் ஆன்லைன் தரிசனத்துக்கு 5500 டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டன. இவை அனைத்தும் கடகடவென விற்றுத் தீர்ந்துவிட்டன.
No comments:
Post a Comment