12 - 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி!
\
12 - 18 வயது சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட இந்திய அரசு அனுமதியளித்துள்ளது.
12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும், 12 வயதுக்கு கீழான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்படவில்லை.
கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை 12 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுமட்டுமல்லாமல், கோவின் இணையதளத்தில் குழந்தைகளையும் பதிவு செய்ய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சிறுவர்களுக்கு செலுத்தப்பட அனுமதி பெற்றுள்ள இரண்டாவது தடுப்பூசி கோவாக்சின் ஆகும்.
இதற்கு முன் Zycov-D தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்த அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், Zycov-D மூன்று டோஸ் கொண்ட தடுப்பூசியாகும். கோவாக்சினுக்கோ இரண்டு டோஸ் மட்டுமே.
சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு இந்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமெனவும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். சிறுவர்களுக்கான தடுப்பூசி கொள்கைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment