பொங்கல் பண்டிகை வரைதான் டைம்... புதுச்சேரி மக்களுக்கு ஆளுநர் கெடு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, December 25, 2021

பொங்கல் பண்டிகை வரைதான் டைம்... புதுச்சேரி மக்களுக்கு ஆளுநர் கெடு!

பொங்கல் பண்டிகை வரைதான் டைம்... புதுச்சேரி மக்களுக்கு ஆளுநர் கெடு!பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள ஏ.எப்.டி பஞ்சாலையில் உள்ள குடோனில் கொரோனா, ஓமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கைகள் அமைப்பது தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், 'புதுச்சேரியில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தேசிய இளைஞர் தின விழா நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளிடம் மாநில எல்லைகளில் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணம் சரிபார்க்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் தடுப்பூசி செலுத்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே விடுதி அறைகளை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொண்டாட்டங்களில் பங்கேற்க அனுமதி கிடையாது. அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.

கொரோனா எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வரும் பொங்கல் பண்டிகைக்குள் புதுச்சேரியில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கெடு விதித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad