அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி… ஈபிஎஸ் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது!
அரசு வேலை வாங்கித்தருவதாக பல கோடி மோசடி செய்யப்பட்ட புகாரின் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்து வந்தவர் மணி. இவர் கடந்த 4 ஆண்டாக அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் உள்ள மணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலித்ததில் தனது நண்பரான செல்வகுமாருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, 13 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலை வாங்கித் தருவதாக செல்வகுமார் என்பவர் மோசடி ஈடுபட்டதாக நெய்வேலி சேர்ந்த பொறியாளர் தமிழ்ச்செல்வன் என்பவரும் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வகுமாரை கடந்த மூன்று மாதங்களாக தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த செல்வகுமாரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தனர்.
அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த முறைகேடு புகாரில் மேலும் பலர் சிக்குவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment