ஏற்ற இறக்கத்தில் உள்ள கொரோனா... அரசின் நிலைப்பாடு என்ன?
புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1700 பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையுல் புதுச்சேரியில் ஏழு பேர், காரைக்கால், மாஹேவில் தலா 2 பேர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 12 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 145 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையை பொறுத்தவரையில் 1,29 ஆயிரத்து 206 இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1,27,379 பேர் குணடமைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,880 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 8 லட்சத்து 26 ஆயிரத்து 345 பேரும், இரண்டு தவணைகளை 5 லட்சத்து 45 ஆயிரத்து 841 பேரும் என மொத்தமாக 13 லட்சத்து 72 ஆயிரத்து 186 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்... சன்னி லியோன் புதுச்சேரி விஜயம்!
நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுவையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment