தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்... விசாரணை வளையத்துக்குள் இபிஎஸ்?!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்ததால், ஒரு நபர் ஆணையம் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் தூத்துக்குடி வந்திருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் உள்ளிட்ட முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட 4 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடத்தப்பட்டு வரும் நீதி விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை, அரசு வேலை மட்டும் கிடைத்தால் போதாது; நீதியும் கிடைக்க வேண்டும்.
துப்பாக்கி சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்' என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்திருந்தார்.
ஆகையால் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஒரு நபர் விசாரணை ஆணைய நீதிபதி, அப்போது ஆட்சியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment