ஆன்லைன் வங்கி சேவைகள் தற்காலிக நிறுத்தம்! – எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!
இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியான எஸ்.பி.ஐ பராமரிப்பு காரணங்களுக்காக வங்கி ஆன்லைன் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் ஏராளமான வங்கி கிளைகள் மற்றும் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது எஸ்பிஐ வங்கி.
இதன் சேவைகள் ஆன்லைனிலும் எளிதாக கிடைக்கும் வகையில் ஆன்லைன் பரிவர்த்தனை, கடன் விண்ணப்பித்த மேலும் பல சேவைகளும் எளிதாக கிடைக்கும்படி அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வழக்கமான தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக டிசம்பர் 11 இன்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை வங்கியின் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இந்த நேரத்திற்குள்
ஆன்லைன் சேவைகள் சரியாக செயல்படாது என்றும், காலை வழக்கம்போல சேவைகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment