பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி... தமிழக அரசு அசத்தல் ஏற்பாடு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, December 27, 2021

பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி... தமிழக அரசு அசத்தல் ஏற்பாடு!

பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி... தமிழக அரசு அசத்தல் ஏற்பாடு!



 -18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா லைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க ஒரே ஆயுதமாக கருதப்படும் தடுப்பூசி, வாரந்தோறும் நடத்தப்படும் மெகா முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெபரும்பாலோருக்கு கொரோனா முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்ட நிலையில், தற்போது இரண்டாம்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், '15 -18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (டிசம்பர் 25) அறிவித்திருந்தார்.


பிரதமரின் இந்த அறிவிப்பை அடுத்து, பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆயத்த பணியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. தமிழகத்தில் 15- 18 வயதுக்குட்பட்ட 33 லட்சம் சிறார்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கே நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஏற்கெனவே வாரந்தோறும் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாமுடன், பள்ளி மாணவர்களையும் சேர்த்து கூடுதல் தடுப்பூசி தேவைப்படுவதால், அதனை உடனே ஒதக்கீடு செய்யும்படியும் மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டு கொண்டுள்ளது. மாணவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியே செலுத்தப்பட உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்குள் நுழைத்துவிட்ட நிலையில், ஜனவரி 10 முதல் முன்களப் பணியாளர்கள், முதியோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்றும் பிரதமர் மோடி அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad